டோக்கன் வழங்கி பணப்பட்டுவாடா: கமல் குற்றச்சாட்டு
கோவை தெற்கில் மறுவாக்குப்பதிவுக்கு வலியுறுத்துவோம்: கமல்ஹாசன்


கோவை: கோவை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் மறுதேர்தல் நடத்த வலியுறுத்துவோம் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கோவை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், திரைப்பட நடிகருமான கமல்ஹாசன், இன்று காலை 11 மணிக்கு தொகுதிக்கு உள்பட்ட கெம்பட்டி காலனியில் உள்ள ஒரு வாக்குச்சாவடிக்கு வருகை புரிந்து பார்வையிட்டார்.
அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ''கோவை தெற்கு தொகுதியில் பணம் பட்டுவாடா மும்முரமாக நடைபெற்று வருகிறது. டோக்கன் வழங்கி, பரிசு மற்றும் வீட்டு உபயோகப் பொருள்கள் வழங்குவதாக தகவல் கிடைத்ததால், நான் புறப்பட்டு வந்தேன்.
டோக்கன் வழங்கியதற்கான நகல் என்னிடம் உள்ளது. பணமும் அதிகளவில் வழங்கப்படுகிறது. இதுதொடர்பாக, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் அளிப்பேன்.
புகார்கள் அதிகரிக்கும் பட்சத்தில் மறுவாக்குப்பதிவுக்கு வலியுறுத்துவோம்'' என்றார். கமல்ஹாசனுடன், அவரது மகள் ஸ்ருதிஹாசனும் வாக்குச்சாவடிக்கு வந்திருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...