தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

குன்னூர் அருகே பாரம்பரிய உடையணிந்து வாக்களித்த பழங்குடியின மக்கள்

குன்னூர் அருகே உள்ள மலைக் கிராமங்களில் பாரம்பரிய உடையணிந்து வந்த பழங்குடி மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் தங்களது ஜனநாயக கடமையாற்றினர்.

News image
Updated On :6 ஏப்ரல் 2021, 11:46 am

DIN

குன்னூர் அருகே உள்ள மலைக் கிராமங்களில் பாரம்பரிய உடையணிந்து வந்த பழங்குடி மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் தங்களது ஜனநாயக கடமையாற்றினர்.

நீலகிரி மாவட்டத்தில்  குன்னூர் தொகுதிக்கு உள்பட்ட எடப்பள்ளி இளிதுரை, கட்டபெட்டு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள படுகர், கோத்தர் மற்றும் இன பழங்குடியின மக்கள் தங்களது பாரம்பரிய உடை அணிந்து வாக்குச் சாவடிக்கு வந்து வரிசையில் நின்று வாக்களித்தனர். இதில் 80 வயதைக் கடந்த மூதாட்டிகள் முதற்கொண்டு தள்ளாத வயதினரும் ஆர்வத்துடன் வந்து தங்களது ஜனநாயக கடமையாற்றினர். 

Story image

நீலகிரி மாவட்டத்தில் 3 தொகுதிகளில் உள்ள 868 வாக்குச்சாவடிகளில் இன்று காலை முதல் அமைதியாகவும் விறுவிறுப்பாகவும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மலைக் கிராமங்களில் வசித்து வரும் தோட்டத் தொழிலாளர்களும்  வாக்களித்துச் செல்கின்றனர்.

குறிப்பாக  குன்னூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள மலைக் கிராமங்களில் வாழ்ந்து வரும் படுகர், கோத்தர் மற்றும் தோடர் இன மக்கள் தங்களது பாரம்பரிய உடையான வெள்ளை நிற உடைகளை அணிந்தபடி வாக்குச் சாவடிக்கு வந்து வாக்களித்துச் செல்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.