மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

தருமபுரி: அமைச்சர் கே.பி.அன்பழகன், எம்.பி.செந்தில்குமார் வாக்களித்தனர்

தருமபுரியில் அமைச்சர் கே.பி.அன்பழகன், மக்களவை உறுப்பினர் டிஎன்வி எஸ்.செந்தில்குமார் ஆகியோர் தங்களது வாக்கைப் பதிவு செய்தனர்.

News image
கெரகோட அள்ளியில் வாக்கைப் பதிவு செய்யும் அமைச்சர் கே.பி.அன்பழகன்
Updated On :6 ஏப்ரல் 2021, 4:31 am

DIN

தருமபுரி: தருமபுரியில் அமைச்சர் கே.பி.அன்பழகன், மக்களவை உறுப்பினர் டிஎன்வி எஸ்.செந்தில்குமார் ஆகியோர் தங்களது வாக்கைப் பதிவு செய்தனர்.

பாலக்கோடு தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கே.பி.அன்பழகன் காரிமங்கலம் அருகே உள்ள கெரகோட அள்ளியில் அமைந்துள்ள வாக்குச் சாவடியில் தனது வாக்கைப் பதிவு செய்தார்.

இதேபோல தருமபுரி விஜய் வித்யாலயா பள்ளியில் அமைந்துள்ள வாக்குச் சாவடியில் தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் டிஎன்வி எஸ்.செந்தில்குமார் தனது வாக்கைப் பதிவு செய்தார்.

இதேபோல தருமபுரி தொகுதியில் போட்டியிடும் தடங்கம் பெ.சுப்ரமணி எம்எல்ஏ தடங்கம் கிராமத்தில் அமைந்துள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார். பாமக வேட்பாளர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், நல்லம்பள்ளி அருகே சாமிசெட்டிப்பட்டியில் அமைந்துள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார்.

பாலக்கோடு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பி.கே.முருகன், பாலக்கோடு அருகே பாவளி கிராமத்தில் அமைந்துள்ள அரசு நடுநிலைப் பள்ளி வாக்குச் சாவடியில் வாக்களித்தார்.

இதேபோல பென்னாகரத்தில் தொகுதியில் போட்டியிடும் பாமக மாநிலத் தலைநகர் ஜி.கே.மணி, பென்னாகரம் அருகே அஜ்ஜன அள்ளியில் அமைந்துள்ள அரசு நடுநிலைப் பள்ளி வாக்குச் சாவடியில் வாக்களித்தார்.

பென்னாகரம் தொகுதி திமுக வேட்பாளர் பிஎன்பி இன்பசேகரன் எம்எல்ஏ குள்ளாத்திரம்பட்டி வாக்குச் சாவடியில் தனது வாக்கைப் பதிவு செய்தார்.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் ச.ப.கார்த்திகா ஏ.ஜெட்டிஅள்ளியில் அமைந்துள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.