மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

எடப்பாடி தொகுதியில் முதல்வர் வாக்களித்தார்

சேலம் மாவட்டம் சிலுவம்பாளையம் வாக்குச்சாவடியில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி குடும்பத்துடன் சென்று வாக்களித்தார்.

News image
முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வாக்களித்தார்
Updated On :6 ஏப்ரல் 2021, 5:56 am

DIN

சேலம் மாவட்டம் சிலுவம்பாளையம் வாக்குச்சாவடியில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி குடும்பத்துடன் சென்று வாக்களித்தார்.

வாக்களிப்பதற்கு முன்பாக தனது இல்லத்தில் வைத்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். ஆகியோரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் தனது இல்லத்திலிருந்து அரசுப் பள்ளியிலிருந்த  வாக்குச்சாவடிக்கு  நடந்து சென்று முதல்வர் பழனிசாமி குடும்பத்துடன் வாக்களித்தார். உடன் அவரது மகன் மிதுன் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள். பொதுமக்களோடு வரிசையில் நின்று வாக்குபதிவு செய்தனர்.

Story image

தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த முதல்வர்,  தமிழக வாக்காளர்கள் அனைவரும் தவறாமல்  வாக்களித்து தங்கள் ஜனநாயக கடமையினை நிறைவேற்றிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

முன்னதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்டம் பெரியகுளம் தொகுதியில் உள்ள தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார். 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.