தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

போடி அருகே எம்.பி. கார் மீது கல்வீச்சு சம்பவத்தில் ஒருவர் கைது: கண்டித்து மறியல்

போடி அருகே வியாழக்கிழமை தேனி மக்களவை உறுப்பினர் கார் மீது கல்வீச்சு சம்பவத்தில் அமமுக பிரமுகர் கைது செய்யப்பட்டதை கண்டித்து அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

News image

பெருமாள்கவுண்டன்பட்டி கிராமத்தில் அமமுக பிரமுகர் கைது  செய்யப்பட்டதை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட அவரது உறவினர்கள்.

Updated On :8 ஏப்ரல் 2021, 4:31 am


போடி: போடி அருகே வியாழக்கிழமை தேனி மக்களவை உறுப்பினர் கார் மீது கல்வீச்சு சம்பவத்தில் அமமுக பிரமுகர் கைது செய்யப்பட்டதை கண்டித்து அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

போடி அருகே பெருமாள்கவுண்டன்பட்டி கிராமத்தில் தேர்தல் நாளன்று வாக்குச்சாவடியை பார்வையிட வந்த தேனி மக்களவை உறுப்பினர் ஓ.ப.ரவீந்திரநாத்தின் கார் மீது சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தியதில் கார் சேதமடைந்தது. 

இதுகுறித்து கார் ஓட்டுநர் பாண்டியன் என்பவர் கொடுத்த புகாரில் 17-க்கும் மேற்பட்டவர்கள் மீது போடி தாலுகா காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.

இதில், அமமுகவைச் சேர்ந்த மாயி (58) என்பவரை போலீஸார் வியாழக்கிழமை காலை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் காலையில் அப்பகுதி வழியாக சென்ற ஒரு பேருந்தும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இதனையடுத்து போடி தாலுகா காவல் நிலைய சார்பு ஆய்வாளர் வேல்மணிகண்டன் மற்றும் போலீஸார் கிராம மக்களை சமாதானப்படுத்தினர். இதனையடுத்து அரை மணி நேர சாலை மறியல் கைவிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.