நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவராக இருந்த 9 ஐஏஎஸ் அதிகாரிகளை கட்டாய ஓய்வில் அனுப்ப தகவல் ஆணையம் பரிந்துரை

ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் பொறுப்பு வகித்த 9 ஐஏஎஸ் அதிகாரிகளை கட்டாய ஓய்வில் அனுப்ப மாநில தகவல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

News image

9 ஐஏஎஸ் அதிகாரிகளை கட்டாய ஓய்வில் அனுப்ப தகவல் ஆணையம் பரிந்துரை

Updated On :10 ஏப்ரல் 2021, 10:11 pm

DIN


சென்னை: ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் பொறுப்பு வகித்த 9 ஐஏஎஸ் அதிகாரிகளை கட்டாய ஓய்வில் அனுப்ப மாநில தகவல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் பொறுப்பு வகித்த 9 ஐஏஎஸ் அதிகாரிகள் மீதும் எழுந்த புகார்கள் குறித்து விசாரணை நடத்திய மாநில தகவல் ஆணையம், அவர்களை கட்டாய ஓய்வில் அனுப்ப தமிழக தலைமைச் செயலாளருக்கு பரிந்துரைக் கடிதம் அனுப்பியுள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியத்தில், இவர்களது பதவிக் காலத்தில், ஆசிரியர் தேர்வு நடைமுறைகளில் வெளிப்படைத் தன்மை கடைப்பிடிக்கப்படவில்லை என மாநில தகவல் ஆணையத் அதிருப்தி தெரிவித்துள்ளது.

ஆசிரியர் தேர்வுக்கான கேள்வித்தாள் வடிவமைப்பில் குளறுபடி, தேர்வர்களின் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காதது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை, தலைமைச் செயலருக்கு அனுப்பிய அறிக்கையில் தகவல் ஆணையம் தெரிவித்துள்ளது.

2011-ஆம் ஆண்டு முதல் 2020 வரை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர்களாக இருந்த ககர்லா உஷா, ஜெகந்நாதன், சீனிவாசன், வெங்கடேஷ், லதா, வியூ நாயர் உள்ளிட்ட 9 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது தகவல் ஆணையம் புகார் அளித்திருக்கிறது. இதனால், அந்தக் காலக்கட்டத்தில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர்களாக இருந்தவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.