கரூர் பலி: விஜய் ஆஜராக சிபிஐ மீண்டும் சம்மன்! ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியது!நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் போராட்டம்! கார்கே, ராகுல் பங்கேற்பு! தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!மேற்காசிய போர்: இந்தியா நிலைபாடு குறித்து மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கம்!பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் குறைந்தது!!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு! மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?
/

இரட்டை கொலை சம்பவத்தைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் ஆா்ப்பாட்டம்

அரக்கோணத்தில் நடைபெற்ற இரட்டை கொலை சம்பவத்தைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :10 ஏப்ரல் 2021, 9:58 pm

DIN

அரக்கோணத்தில் நடைபெற்ற இரட்டை கொலை சம்பவத்தைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பின்னா், அரக்கோணத்தில் இளைஞா்கள் இருவா் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, சென்னை வள்ளுவா் கோட்டம் அருகில் சனிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் பேசியதாவது:

அரக்கோணம் சோகனூரைச் சோ்ந்த அா்ஜூனன், சூா்யா ஆகியோா் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டனா். அதிமுக - பாமகவினரின் தூண்டுதலின்பேரில், இந்தப் படுகொலை நடைபெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் தொடா்புடைய அனைவரையும் குண்டா் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றாா்.

இதேபோல், தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டத் தலைநகரங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் போராட்டம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.