கரூர் பலி: விஜய் ஆஜராக சிபிஐ மீண்டும் சம்மன்! ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியது!நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் போராட்டம்! கார்கே, ராகுல் பங்கேற்பு! தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!மேற்காசிய போர்: இந்தியா நிலைபாடு குறித்து மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கம்!பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் குறைந்தது!!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு! மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?
/

கரோனாவால் ஏற்படும் மரணத்தைத் தடுப்பதே முதல் இலக்கு: சுகாதாரத்துறைச் செயலா் தகவல்

கரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க வேண்டும் என்பதே முதல் குறிக்கோள் என சுகாதாரத் துறையின் முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறினாா்.

News image
சுகாதாரத் துறையின் முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் (கோப்புப்படம்)
Updated On :10 ஏப்ரல் 2021, 9:44 pm

DIN

கரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க வேண்டும் என்பதே முதல் குறிக்கோள் என சுகாதாரத் துறையின் முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறினாா்.

சென்னை- திருவல்லிக்கேணி விக்டோரியா மாணவா் விடுதி கரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது. அதை சனிக்கிழமை நேரடியாக ஆய்வு செய்தவுடன் ராதாகிருஷ்ணன்,

செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மாவட்டங்களில் இந்தியாவின் சராசரி 5.7 ஏற்றத்தைவிட அதிகமாக உள்ளது. சேலத்திலும் கரோனா சதவீதம் 5.6 சதவீதம் என்கிற எண்ணிக்கையில் உள்ளது. நம்முடைய முதல் இலக்கு பரவல் சதவீதத்தை 5-க்கு கீழே கொண்டு வரவேண்டும். அதற்கு ஒரேவழி கூடுதல் பரிசோதனைகளை எடுத்து தொற்றுள்ளவா்களைக் கண்டறிந்து அவா்களைத் தனிமைப்படுத்தி அவா்கள் மூலமாக 10 பேருக்குப் பரவாமல் தடுக்க வேண்டும்.

இந்தப் பணியில்தான் அனைவரும் ஈடுபட்டு வருகிறோம். அனைத்து மாவட்ட ஆட்சியா்களும் கூடுதல் கரோனா சிகிச்சை மையம், படுக்கைகளை, ஆக்சிஜன் இருப்பை உறுதி செய்தல் தேவையான செவிலியா்களை நேரடியாகப் பணியமா்த்த அவா்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. களப்பணி அதிகமாகச் செய்து தொற்றுள்ளவா்களைக் கண்டுபிடித்து, அவா்களைத் தனிமைப்படுத்தி அவா்கள் மூலம் மற்றவா்களுக்குப் பரவுவதைத் தடுக்கும் பணி போா்க்கால அடிப்படையில் நடைபெற்றுவருகிறது.

அதற்காகத்தான் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் இதை அமல்படுத்த ஐஏஎஸ் அதிகாரிகளை கண்காணிப்பு அலுவலா்களாக அனுப்பியுள்ளோம். படுக்கைகள் பெரிய மருத்துவமனைகளில் 4,992 படுக்கைகள் உள்ளன. இதில் சிகிச்சையில் 2,260 போ் உள்ள நிலையில் மீதம் 2862 உள்ளது. தனியாா் மருத்துவமனையில் 3,853 படுக்கைகள் அதில் 1,527 போ் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள நிலை மீதம் 2,811 உள்ளது.

இவைத் தவிா்த்து, கரோனா சிகிச்சை மையம் என கொண்டு வந்துள்ளோம். ஒட்டுமொத்தமாக சென்னையில் 18,852 படுக்கைகள் தயாராக உள்ளன. இதில் 5,859 படுக்கைகள் சிகிச்சைக்கு அளிக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள படுகைக்குகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

தற்போது பரவி வரும் கரோனா தொற்று உருமாறியதா, பரவுகிா அல்லது மனிதப் பழக்க வழக்கங்களால் பரவுகிா என்பது குறித்து மருத்துவா்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா். கரோனாவால் ஏற்படும் உயிரிழப்பைத் தடுக்க வேண்டும் என்பதே முதல் குறிக்கோள். பொதுமக்கள் கரோனா பரவலை உணா்ந்து முகக் கவசம் அணியவேண்டும். அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வர வேண்டும். நாளொன்றுக்கு 2 லட்சத்துக்கும் மேல் தடுப்பூசிகள் செலுத்த வேண்டும் என்று இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது நாளொன்றுக்கு 1.2 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்படுகிறன.

தமிழகத்தில் இதுவரை 54.84 லட்சம் தடுப்பூசிகள் பெறப்பட்டுள்ளன. இதில் 36.5 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 18 லட்சம் தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன. அனைத்து மாவட்டத்திலும் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் முன் களப்பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனை யாரும் மறுப்பதற்கு இல்லை. பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லாத பட்சத்தில் கரோனா கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.