காங்கயம் பேருந்து நிலையத்தில் கிருமிநாசினி தெளிப்பு
கரோனா தடுப்பு நடவடிக்கையாக, காங்கயம் பேருந்து நிலையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டது.


கரோனா தடுப்பு நடவடிக்கையாக, காங்கயம் பேருந்து நிலையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டது.
இதனை முன்னிட்டு காங்கயம் பேருந்து நிலையம், தினசரி சந்தை, கடை வீதி உள்ளிட்ட நகரின் பல பகுதிகளில் கிருமிநாசினி தெளித்து ஆய்வு செய்யப்பட்டது.
பேருந்து நிலையக் கடைகள், தினசரி சந்தை பகுதிகளில் சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வணிகர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும், பேருந்து நிலையத்தில் நின்று செல்லும் பேருந்துகளுக்கும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு கரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த தடுப்பு நடவடிக்கையில் நகராட்சி ஆணையர் மூர்த்தி, சுகாதார ஆய்வாளர் செல்வராஜ், மற்றும் சுகாதார மேற்பார்வையாளர்கள் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...