சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

சென்னையில் அதிகரிக்கும் கரோனா பரவல்: மண்டலவாரியாக பாதிப்பு விவரம்

சென்னையில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 15,761 ஆக அதிகரித்துள்ளது. 

News image

சென்னையில் கரோனா பாதிப்பு

Updated On :12 ஏப்ரல் 2021, 9:52 am

சென்னையில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 15,761 ஆக அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தலைநகர் சென்னையிலும் கரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. 

அதன்படி சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ள பாதிப்பு நிலவரப்படி, சென்னையில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 15,761 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை கரோனாவுக்கு 4,324 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், மொத்தமாக 2,65,126 பேர் பாதிக்கப்பட்டதில் 2,45,041 பேர் குணமடைந்துள்ளனர். 

மண்டலவாரியாக கரோனா பாதிப்பு விவரமும் வெளியிடப்பட்டுள்ளது. இதில் தேனாம்பேட்டையில் அதிகபட்சமாக 1,819 பேரும், அதையடுத்து அண்ணா நகரில் 1,753 பேரும், ராயபுரத்தில் 1,444 பேரும், கோடம்பாக்கத்தில் 1,460 பேரும் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

Caption

Caption

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.