ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

திருப்பூரில் 1,275 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

திருப்பூரில் குடோனில் பதுக்கி வைத்திருந்த 1,275 கிலோ புகையிலைப் பொருள்களை காவல் துறையினர் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர்.

News image
திருப்பூரில் 1,275 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
Updated On :13 ஏப்ரல் 2021, 6:40 am

DIN

திருப்பூரில் குடோனில் பதுக்கி வைத்திருந்த 1,275 கிலோ புகையிலைப் பொருள்களை காவல் துறையினர் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர்.

திருப்பூர் ராக்கியாபாளையம் பிரிவில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஜெ.கவின்பட்டேல் (22) என்பவர் வசித்து வருகிறார். இவர் நெருப்பெரிச்சல் ஜி.என்.கார்டன் பகுதியில் குடோன் எடுத்துத் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்து வருவதாக அனுப்பர்பாளையம் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

இதன்பேரில் காவல் ஆய்வாளர் ஜி.ஆனந்த் தலைமையிலான காவல் துறையினர் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் கவின்பட்டேலின் குடோனில் சோதனை நடத்தினர். இதில், தடைசெய்யப்பட்ட 1,275 புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரியவந்தது. 

இதையடுத்து, அவரைக் கைது செய்ய காவல் துறையினர் புகையிலைப் பொருள்களையும் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு சுமார் ரூ.7 லட்சம் ஆகும் என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.