வேளச்சேரி வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு: முழு விவரம்
வேளச்சேரியில் சர்ச்சைக்குரிய வாக்குச்சாவடியில் நடைபெறும் மறுவாக்குப்பதிவு குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் முழுமையான அறிக்கை வெளியிட்டுள்ளார்.


சென்னை: வேளச்சேரியில் சர்ச்சைக்குரிய வாக்குச்சாவடியில் நடைபெறும் மறுவாக்குப்பதிவு குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் முழுமையான அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 06.04.2021 அன்று எண்.26, வேளச்சேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட டி.ஏ.வி. பப்ளிக் பள்ளி, சீதாராம் நகர், வேளச்சேரி, சென்னை-42 என்ற முகவரியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி எண்-92க்கு நடைபெற்ற வாக்குப்பதிவு செல்லத்தக்கதல்ல என்றும், மேலும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 58(1)(b)ன் கீழ் 26. வேளச்சேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட டி.ஏ.வி. பப்ளிக் பள்ளி, சீதாராம் நகர், வேளச்சேரி, சென்னை-42. என்ற முகவரியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி எண் 92ல் மறுவாக்குப்பதிவு 17.04.2021 சனிக்கிழமை காலை 7.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை நடத்த அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி, மேற்படி வாக்குச்சாவடியில் 17.04.2021 அன்று காலை 7.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை மறுவாக்குப்பதிவு நடத்தப்பட உள்ளது.
மேலும், இவ்வாக்குச்சாவடியானது ஆண் வாக்காளர்களுக்கான வாக்குச்சாவடி என்பதால், இந்த மறுவாக்குப்பதிவை மேற்படி வாக்குச்சாவடி எண்.92க்குட்பட்ட 548 ஆண் வாக்காளர்கள் மட்டுமே வாக்களிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வாக்குப்பதிவின்போது வாக்களிக்கும் நபர்களின் இடது கை நடுவிரலில் அழியா மை வைக்கப்படும் எனவும், இந்தக் குறிப்பிட்ட வாக்குச்சாவடியில் 80 வயதுக்கு மேற்பட்ட வயது முதிர்ந்த வாக்காளர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் ஆகியோரில் ஏற்கனவே தபால் ஓட்டு அளித்தவர்களும், அளிக்க இருப்பவர்களும் நேரில் சென்று வாக்களிக்க இயலாது என மாவட்ட தேர்தல் அலுவலர்/ஆணையாளர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...