புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சங்ககிரி வீர ஆஞ்சனேயர் கோயிலில் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பு பூஜைகள்

தமிழ்ப் புத்தாண்டினையொட்டி சேலம் மாவட்டம், சங்ககிரி நகர் கிரிகாலனியில் உள்ள அருள்மிகு வீர ஆஞ்சனேயர் கோயிலில் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் புதன்கிழமை நடைபெற்றது. 

News image

தமிழ்ப் புத்தாண்டினையொட்டி சங்ககிரி கிரிகாலனியில் உள்ள ஸ்ரீ வீர ஆஞ்சனேயர் கோயிலில் உள்ள அருள்மிகு காசிவிசாலாட்சி அம்மன் உற்சவர் மூர்த்தி சுவாமிகளுக்கு புதன்கிழமை செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்காரம்

Updated On :14 ஏப்ரல் 2021, 7:31 am

DIN

சங்ககிரி: தமிழ்ப் புத்தாண்டினையொட்டி சேலம் மாவட்டம், சங்ககிரி நகர் கிரிகாலனியில் உள்ள அருள்மிகு வீர ஆஞ்சனேயர் கோயிலில் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் புதன்கிழமை நடைபெற்றது. 

தமிழ் பிலவ புத்தாண்டினையொட்டி அருள்மிகு வீர ஆஞ்சனேயர், ராமர், சீதாதேவி, லட்சுமணன் சுவாமிகள், காசி விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன் சுவாமிகளுக்கு அதிகாலையிலேயே பால், தயிர், மஞ்சள், சந்தனம், திருமஞ்சனம், தேன், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்பட்டன.

அதனையடுத்து காசி விசாலாட்சி அம்மன் உற்சவ மூர்த்தி சுவாமிகளுக்கும் சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. முன்னதாக பெருமாள் திருப்பள்ளி எழுச்சி, ஆஞ்சநேயர், அம்மன் - சுவாமி உள்பட பல்வேறு சுவாமிகளின் பக்திப் பாடல்கள் பாடப்பட்டன. சங்ககிரி நகர் பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் அதிகளவில் கலந்து கொண்டு சுவாமிகளை வழிபட்டுச் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.