வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

மணப்பாறை அருகே லாரி - வேன் மோதல்: மகன் பலி, தந்தை காயம் 

மணப்பாறை அருகே லாரி மீது, மற்றொரு சரக்கு வேன் பின் பகுதியில் மோதிய விபத்தில் மகன் உயிரிழந்தார். ஓட்டுனராக சென்ற தந்தை படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். 

News image
மணப்பாறை அருகே லாரி - வேன் மோதல்: மகன் பலி, தந்தை காயம் 
Updated On :16 ஏப்ரல் 2021, 11:17 am

DIN

மணப்பாறை அருகே தேசிய நெடுஞ்சாலையில் பழுதாகி நின்றுகொண்டிருந்த லாரி மீது, மற்றொரு சரக்கு வேன் பின் பகுதியில் மோதிய விபத்தில் மகன் உயிரிழந்தார். ஓட்டுனராக சென்ற தந்தை படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். 

தூத்துக்குடி பகுதியிலிருந்து நெய்வேலி நோக்கி நிலக்கரி ஏற்றிச் சென்ற லாரி ஒன்று பஞ்சராகி, திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் துவரங்குறிச்சி அருகே பழுதாகி நின்றுள்ளது. அது சமயம் திருநெல்வேலியிலிருந்து சென்னை நோக்கி பழங்கள் ஏற்றிச் சென்ற சரக்கு வேன் ஒன்று எதிர்பாராத நிலையில், நின்றுகொண்டிருந்த நிலக்கரி லாரியின் பின் பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. 

இதில் பழங்கள் ஏற்றி வந்த சரக்கு வேனில் ஓட்டுனராக இருந்த திருநெல்வேலி சாலியத்தெருவை சேர்ந்த சபரிராஜ் வலது கண் மற்றும் தலையில் பலத்த காயமடைந்தார். அதே வண்டியில் தந்தைக்கு உதவியாகச் சென்ற அவரது 26 வயது மகன் சிம்சன் இடுப்பு பகுதியில் பலத்த காயமடைந்தார். 

தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற போலீஸார் இருவரையும் மீட்டு துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவிக்குப் பின் மேல்சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிம்சன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் உடற்கூராய்விற்காக மணப்பாறை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. 

படுகாயமடைந்த சபரிராஜ் மேல்சிகிச்சைக்காக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து நிலக்கரி ஏற்றி வந்த லாரி ஓட்டுனர் திருநெல்வேலியை சுடலைமணி அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து துவரங்குறிச்சி காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.