மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பிறந்த நாள்: முதல்வர் பழனிசாமி, மு.க.ஸ்டாலின் வாழ்த்து

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

News image
Updated On :16 ஏப்ரல் 2021, 10:30 am

DIN

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் பிறந்த நாளை முன்னிட்டு ஆளுநருக்கு இன்று (16.4.2021) மலர்க்கொத்துடன் வாழ்த்துக் கடிதம் அனுப்பினார்கள்.

தனக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த முதல்வருக்கு ஆளுநர் தனது நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்கள்.

மு.க.ஸ்டாலின்: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தின் மீதும் - தமிழக மக்கள் மீதும் மிகுந்த பாசம் கொண்டிருக்கும் தமிழக ஆளுநர் பொதுவாழ்வில் போற்றத்தக்க பணியாற்றியவர். அரசியலிலும் - நிர்வாகத்திலும் பழுத்த அனுபவம் கொண்ட அவர், நான் சந்தித்த நேரங்களில் எல்லாம் என்னிடம் தனிப்பட்ட முறையில் அன்பு பாராட்டியவர்.

அவரது பொதுவாழ்வு மென்மேலும் சிறக்க - ஆரோக்கியத்துடனும், நலமுடனும் பல்லாண்டு வாழ்ந்து - தமிழகத்திற்கும், நம் நாட்டிற்கும் ஆற்றல்மிகுந்த சேவையாற்றிட வேண்டும் என்று இதயபூர்வமாக வாழ்த்துகிறேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.