திருச்சுழி அருகே சாலை விபத்து: பெண் பலி
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே ம.ரெட்டியபட்டியை அடுத்த கானாவிலக்கு பகுதியில் நடைபெற்ற சாலை விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

திருச்சுழி அருகே சாலை விபத்து: பெண் பலி

திருச்சுழி அருகே சாலை விபத்து: பெண் பலி
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே ம.ரெட்டியபட்டியை அடுத்த கானாவிலக்கு பகுதியில் வெள்ளிக்கிழமை (பிற்பகலில்) நடைபெற்ற சாலை விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ம.ரெட்டியபட்டியை அடுத்த தும்முசின்னம்பட்டியைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி(41). விவசாயியான இவரது மனைவி கனகவள்ளி(38). இதனிடையே தம்பதியர் இருவரும் வெள்ளிக்கிழமை பிற்பகல் ஒன்றாக ஒரு இருசக்கர வாகனத்தில் கிளம்பி வெளியூர் சென்றனர். அப்போது அவர்கள் கானாவிலக்கு எனும் பகுதியருகே சென்றபோது,எதிர்பாரா விதமாக கனகவள்ளியின் சேலை அவர்களது வாகனத்தின் பின்சக்கரத்தில் சிக்கியதில் அவர் தூக்கிவீசப்பட்டு சாலையில் விழுந்தாராம்.
அப்போது அவர்கள் பின்னால் வந்துகொண்டிருந்த (டாடா ஏஸ்) சரக்கு வாகனத்தின் சக்கரத்தில் சிக்கியதில் கனகவள்ளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாராம்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், கனகவள்ளியின் சடலத்தை மீட்டு பிணக்கூறு ஆய்விற்காக திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக வழக்குப்பதிந்து பரளச்சி காவல்துறையினர்,விபத்து நேர்ந்த விதம்குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...