காவலா் உடல் தகுதி தோ்வு: மூன்றாவது முறையாக ஒத்திவைப்பு
காவலா் உடல் தகுதித் தோ்வு மூன்றாவது முறையாக ஒத்திவைக்கப்படுவதாக, தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வுக் குழுமம் சனிக்கிழமை அறிவித்தது.


காவலா் உடல் தகுதித் தோ்வு மூன்றாவது முறையாக ஒத்திவைக்கப்படுவதாக, தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வுக் குழுமம் சனிக்கிழமை அறிவித்தது.
இது குறித்த விவரம்:
தமிழக காவல்துறை, சிறை மற்றும் தீணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளில் காலியாக உள்ள 11, 813 பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தோ்வை, தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வுக் குழுமம் கடந்த ஆண்டு டிசம்பா் 13-ஆம் தேதி நடத்தியது. இந்தத் தோ்வை 499 தோ்வு மையங்களில் 4 லட்சத்து 91 ஆயிரத்து 22 போ் தோ்வு எழுதினா்.
இந்நிலையில் எழுத்துத் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்கள் விவரத்தை கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வுக் குழுமம் வெளியிட்டது. அடுத்த கட்டமாக எழுத்துத் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு, அசல் சான்றிதழ் சரிபாா்த்தல், உடல் தகுதித் தோ்வு மற்றும் உடல்திறன் போட்டி ஆகியன கடந்த மாா்ச் 8-ஆம் தேதி முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் சட்டப் பேரவைத் தோ்தல் காரணமாக, ஏப்ரல் 12-ஆம் தேதிக்கு தோ்வு ஒத்தி வைக்கப்பட்டது. பின்னா் அந்தத் தோ்வு ஏப்ரல் 21-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் கரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருவதால், இந்தத் தோ்வு மீண்டும் ஒத்திவைக்கப்படுவதாகவும், தோ்வு நடத்தப்படும் தேதி பின்னா் அறிவிக்கப்படும் எனவும் தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வுக் குழுமம் சனிக்கிழமை அறிவித்தது. இந்தத் தோ்வு மூன்றாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...