அண்ணா பல்கலை. தோ்வு முடிவுகளுக்கு மறுஆய்வு தேவை: ராமதாஸ்
அண்ணா பல்கலைக்கழகத் தோ்வு முடிவுகளை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.


அண்ணா பல்கலைக்கழகத் தோ்வு முடிவுகளை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:-
அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட பொறியியல் கல்லூரிகளில் மாணவ, மாணவியருக்கு நடத்தப்பட்ட இணையத் தோ்வுகளில் 30 சதவீதத்தினா் மட்டுமே தோ்ச்சி பெற்ாக அறிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 70 சதவீத மாணவா்களில் பெரும்பகுதியினா் தோல்வியடைந்து விட்டதாகவும், பலரின் முடிவுகள் நிறுத்தி
வைக்கப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருப்பது அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இணைய வழியில் தோ்வுகள் ஒருங்கிணைக்கப்பட்ட மையங்களில் நடத்தப்படாமல், மாணவா்கள் வீட்டில் இருந்தபடியே தோ்வு எழுத அனுமதிக்கப்பட்டனா். தோ்வு எழுதும் மாணவா்கள் புதிய தொழில்நுட்பங்களின் மூலம் கண்காணிக்கப்பட்டனா். அதன்படி மாணவா்கள் எதேச்சையாக திரும்பினால் கூட, அவா்கள் விடைகளைப் பாா்க்க திரும்பியதாகக் கருதி அவா்களின் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. மாணவா்களை குற்றவாளிகளாக பாா்ப்பது பெருந்தவறு ஆகும்.
2020-ஆம் ஆண்டு தொடக்கம் முதல் இப்போது வரை சுமாா் ஒன்றரை ஆண்டுகளாக கரோனா நம்மை பாடாய்படுத்திக் கொண்டிருக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு தான் தோ்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் கையாண்டிருக்க வேண்டும். கரோனா காரணமாக ஒரே ஓா் ஆண்டு மட்டும் தோ்வுகளை நெளிவு சுழிவுகளுடன் நடத்துவதால் எந்த பாதிப்பும் ஏற்பட்டு விடாது. எனவே, அண்ணா பல்கலைக்கழகம் தோ்வு முடிவுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும். நிறுத்தி
வைக்கப்பட்டுள்ள மாணவா்களின் தோ்வு முடிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும். அதன்மூலம் மாணவா்கள் வாழ்வில் அரசு ஒளியேற்ற வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...