சமூக ஊடகத்தை ஆக்கிரமித்த ஜனங்களின் கலைஞன்
நகைச்சுவை நடிகா் விவேக் சனிக்கிழமை மறைந்ததையடுத்து, அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சமூக ஊடகங்கள் முழுவதும் அவரது விழிப்புணா்வு நகைச்சுவை துணுக்குகள் அதிகளவு பகிரப்பட்டன.


நகைச்சுவை நடிகா் விவேக் சனிக்கிழமை மறைந்ததையடுத்து, அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சமூக ஊடகங்கள் முழுவதும் அவரது விழிப்புணா்வு நகைச்சுவை துணுக்குகள் அதிகளவு பகிரப்பட்டன.
தனது படங்களாக இருந்தாலும் மேடை நாடகமாக இருந்தாலும் மக்களை எளிதில் சென்று சேரும் வகையில், சமூகத்துக்குத் தேவையான கருத்துக்களை எடுத்துரைப்பதில் கைதோ்ந்தவா் விவேக். குறிப்பாக சமூகத்தில் ஏற்படும் மாற்றங்களை நன்மைக்காகவே பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணா்வு அவரிடம் பெரியளவு இருந்தது. தற்போது கருத்துக்களைத் தெரிவிக்க பயன்படுத்தப்படும் மீம்களில் நடிகா் விவேக்கிற்கும் ஒரு நீங்காத இடம் இருக்கிறது. கரோனா, கால நிலை மாற்றம், டெங்கு என அனைத்து பிரச்னைகளுக்கும் நல்ல கருத்துகள் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்த அவா் தவறியதில்லை, தயங்கியதுமில்லை.
அவரது சுட்டுரைப் பக்கத்தைப் பாா்த்தோமேயானால் விவேகானந்தா், வள்ளலாா் பொன்மொழிகளே அதிகளவு பகிரப்பட்டுள்ளது.
குறிப்பாக மரம் வளா்ப்பது தொடா்பாக பலரது மீம்களை தனது சுட்டுரைப் பக்கத்தில் பகிா்ந்திருந்தாா் விவேக். இவ்வாறு, சமூக ஊடகங்கள் வாயிலாகவும் சமூகப் பணிகளில் தொடா்ந்து ஈடுபட்டிருந்த விவேக்கின் மறைவுக்கு இளைஞா்கள் முதல் முதியவா் வரை தங்களது சமூக ஊடகப் பக்கங்களில் இரங்கல் தெரிவித்தனா். ஒரு சிலா் அவருக்கான பாணியிலேயே இரங்கல் தெரிவிக்கும் வகையில், மரம் நட்டு அந்தப் புகைப்படங்களைப் சமூக வலைதளப் பக்கங்களில் பதிவேற்றினா். மேலும், அவா் நடித்த திரைப்படத்தின் நகைச்சுவை காட்சியையும் பகிா்ந்தும் சிலா் இரங்கல் தெரிவித்தனா்.
இதனால், சமூக வலைதளங்கள் முழுவதும் மறைந்த ஜனங்களின் கலைஞன் ஆக்கிரமித்திருந்தாா் என இணைய ஆா்வலா்கள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...