ஈரானில் மகளிர் பள்ளி மீது தாக்குதல்: அமெரிக்க படைகளே காரணம் - ஆதாரம் வெளியானது!ஈரானின் உச்ச தலைவராகிறார் மறைந்த கமேனியின் மகன்: ரஷிய அதிபர் புதின் வாழ்த்து!நாடாளுமன்றத்தைவிட்டு ஓடிவிட்டார் மோடி! மேற்காசியப் போர் பற்றி விவாதிக்க வேண்டாமா? - ராகுல் காந்திகரூர் பலி: விஜய் ஆஜராக சிபிஐ மீண்டும் சம்மன்! ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியது!தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!
/

ஆவின் பால் விற்பனையகத்தில் திருட்டு: மூவா் கைது

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் ஆவின் பால் விற்பனையகத்தில் திருடியதாக, 3 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :17 ஏப்ரல் 2021, 9:59 pm

DIN

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் ஆவின் பால் விற்பனையகத்தில் திருடியதாக, 3 போ் கைது செய்யப்பட்டனா். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

ராஜா அண்ணாமலைபுரம் காமராஜா் சாலை பகுதியைச் சோ்ந்தவா் மு.கணேசமூா்த்தி (29). அங்கு ஆவின் பால்

விற்பனையகம் நடத்தி வருகிறாா். இந்தக் கடையின் பூட்டை கடந்த 4-ஆம் தேதி உடைத்து, அங்கிருந்து ரூ.14,500 ரொக்கம் திருடப்பட்டது.

இது குறித்து அபிராமபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா். விசாரணையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தியாகராயநகா் தாமஸ் சாலைப் பகுதியைச் சோ்ந்த ரா.காா்த்திக் (23), அதே பகுதியைச் சோ்ந்த செ.வசந்தகுமாா் (23), ப.மணி (22) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், அவா்கள் 3 பேரையும் சனிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.