தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

வேலூர் பட்டாசுக் கடையில் தீ விபத்து; 2 குழந்தைகள் உள்பட 3 பேர் பலி

வேலூர் மாவட்டம் லத்தேரி பேருந்து நிலையத்தில் உள்ள பட்டாசு கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :18 ஏப்ரல் 2021, 7:25 am

DIN

வேலூர் மாவட்டம் லத்தேரி பேருந்து நிலையத்தில் உள்ள பட்டாசு கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 3 பேர் பலியாகினர். 

வேலூர் மாவட்டம் லத்தேரி பேருந்து நிலையத்தில் மோகன் என்பவரது பட்டாசுக் கடையில் இன்று பிற்பகல் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தொடர்ந்து தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

பின்னர் தீயணைப்புத் துறையினர் வந்து தீயினை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். முன்னதாக அப்பகுதியில் இருந்தவர்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் இறங்கினர். 

தீ விபத்து ஏற்பட்டதையடுத்து மத்திய பேருந்து நிலையம் இருக்கும் பகுதியில் புகைமூட்டமாக காணப்படுகிறது. தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். 

இந்த விபத்தில் கடை உரிமையாளர் மோகன் மற்றும் அவரது 2 பெயரக்குழந்தைகள்  என மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும் கடை முழுமையாக எரிந்து சேதமடைந்துள்ளதாகவும் முதற்கட்டத் தகவல் வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.