தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

ஆம்னி பேருந்துகள் இயங்குமா?: குழப்பத்தில் மக்கள்

தமிழகம் முழுவதும் நாளை முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :20 ஏப்ரல் 2021, 9:22 am

DIN

தமிழகம் முழுவதும் நாளை முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது என்று ஒரு அமைப்பும், இயங்கும் என்று மற்றொரு அமைப்பும் தெரிவித்துள்ளதால் மக்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

பகலில் ஆம்னி பேருந்துகள் இயங்கும் என்று நேற்று (ஏப்.19) ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்திருந்தது.

எனினும் தற்போது கரோனா தொற்று பிரச்னை முடிவிற்கு வரும் வரை ஆம்னி பேருந்துகளை இயக்கப்போவதில்லை என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அன்பழகன் அறிவித்துள்ளார்.

இதனிடையே மற்றொரு சங்கத்தைச் சேர்ந்த தலைவர் அஃப்சல், ஆம்னி பேருந்துகள் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

தங்களிடம் 490 பேருந்து ஆபரேட்டர்கள் இருப்பதால், சுழற்சி முறையில் பேருந்து இயக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இரவு நேர ஊரடங்கால் பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வரும் நிலையில், ஆம்னி பேருந்துகள் இயங்கும் என்று ஒரு அமைப்பும், இயங்காது என்று மற்றொரு அமைப்பும் தெரிவித்துள்ளது பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.