மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,499 கன அடியாக அதிகரித்துள்ளது.
கடந்த இரண்டு நாள்களாக காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக அதிகரித்து வருகிறது.
நேற்று காலை வினாடிக்கு 216 கன அடியாக வந்து கொண்டிருந்த நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 1499 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு ஆயிரம் கன அடி வீதம் குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
குடிநீர் தேவைக்காக திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் நேற்று காலை 97.54அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 97.55அடியாக உயர்ந்துள்ளது.
அணையின் நீர் இருப்பு 61.71 டி.எம்.சியாக இருந்தது.மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் அணையின் நீர்மட்டம் சரிவில் இருந்து மீண்டு உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாயக்கனேரி மலை அரசுப் பள்ளி தரம் உயா்த்தப்படும்: திமுக வேட்பாளா்

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தோ்வு: அரக்கோணம் பள்ளி மாணவி சிறப்பிடம்

மாட்டு வண்டியில் சென்று அதிமுக வேட்பாளா் பிரசாரம்

தென்காசி தொகுதியில் சுயேச்சையாக களம் காணும் விவசாயி!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


