பெரியாறு அணையில் மத்திய துணைக்கண்காணிப்பு குழு இன்று ஆய்வு

முல்லைப்பெரியாறு அணையில் 3 மாதங்களுக்குப்பின் செவ்வாய்க்கிழமை மத்திய துணைக் கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்தனர்.
பெரியாறு அணையில் மத்திய துணைக்கண்காணிப்பு குழு இன்று ஆய்வு
பெரியாறு அணையில் மத்திய துணைக்கண்காணிப்பு குழு இன்று ஆய்வு

முல்லைப்பெரியாறு அணையில் 3 மாதங்களுக்குப்பின் செவ்வாய்க்கிழமை மத்திய துணைக் கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்தனர்.

முல்லைப்பெரியாறு அணையின் உறுதித்தன்மை, பருவகால மாறுபாடுகளின் குறித்துக் கண்காணித்துப் பராமரிக்க உச்சநீதிமன்றம் நியமித்த மூவர் குழுவிற்கு உதவியாகத் துணை கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டது. அதன் தலைவராக தற்போது கொச்சியிலுள்ள மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் சரவணக்குமார் உள்ளார். 

தமிழக பிரதிநிதியாக பெரியாறு சிறப்புக் கோட்ட செயற்பொறியாளர் சாம் இர்வின், உதவி பொறியாளர் குமார், கேரள பிரதிநிதிகளாக கட்டப்பனை நீர்ப்பாசன செயற்பொறியாளர் ஹரிக்குமார், உதவி பொறியாளர் பிரசீத் ஆகியோர் உள்ளனர்.

கடந்த ஜன.13.ல் அணையின் நீர்மட்டம் 121 அடியாக இருந்தபோது துணைக்குழுவினர் பெரியாறு அணையில் ஆய்வு செய்தனர். இந்நிலையில், மூன்று மாதங்களுக்குப்பின் தற்போது கோடை மழை பெய்துவரும் நிலையில் இன்று துணைக்கண்காணிப்பு குழுவினர்  பெரியாறு அணையில் ஆய்வு செய்தனர்.

மெயின் டேம், பேபி அணை, கேலரிப்பகுதி, மதகுப்பகுதி மற்றும் அணையின் நீர்வரத்து, நீர் வெளியேற்றம், சீப்பேஜ் வாட்டர் (கசிவுநீர்) குறித்தும் குழுவினர் ஆய்வு செய்தனர். முன்னதாக குழு தலைவர் தமிழக அதிகாரிகளுடன் தேக்கடி படகுத்துறையிலிருந்து தமிழக பொதுப்பணித்துறை படகில் அணைக்குச் சென்றார்.

அணைப்பகுதியில்  ஆய்வு நடத்திய பின் மாலையில் துணைக்குழுவின் ஆலோசனைக் கூட்டம் குமுளி 1ஆம் மைலில் உள்ள கண்காணிப்புக்குழுவின் அலுவலகத்தில் நடைபெறும். தற்போது கரோனா தொற்று பரவல் இரண்டாம் கட்ட தாக்கத்தால் ஆலோசனைக்கூட்டம் நடத்த வாய்ப்பில்லை என்றும், ஆய்வின் முடிவுகள் கண்காணிப்புக் குழுவுக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com