டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

36 ஆயிரத்தைத் தாண்டியது ஒரு சவரன் தங்கம்

சென்னையில் புதன்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை 36 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 

News image
36 ஆயிரத்தைத் தாண்டியது ஒரு சவரன் தங்கம்
Updated On :21 ஏப்ரல் 2021, 10:26 am

DIN

சென்னையில் புதன்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை 36 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி, வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. இதன்பிறகு, விலை படிப்படியாகக் குறைந்தது. 

குறிப்பாக, மாா்ச் 31-இல் ரூ.33,296 ஆக இருந்தது. இதையடுத்து, கடந்த 6-ஆம் தேதி முதல் மீண்டும் விலை உயா்ந்தது. கடந்த 9-ஆம் தேதி அன்று ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.35 ஆயிரத்தைத் தாண்டியது. இதன்பிறகு, விலை தொடா்ந்து உயா்ந்து வருகின்றது. 

அதன்படி, சென்னையில் இன்று மாலை நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.512 உயர்ந்து, ரூ.36,088-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.64 உயர்ந்து, ரூ.4,511 ஆக உள்ளது. 

வெள்ளி கிராமுக்கு 60 பைசா உயர்ந்து, ரூ.74.10 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.74,100 ஆகவும் விற்கப்படுகிறது. 

புதன்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்............................. 4,511

1 சவரன் தங்கம்...............................36,088

1 கிராம் வெள்ளி.............................74.10

1 கிலோ வெள்ளி.............................74,100

செவ்வாய்க்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்............................. 4,447

1 சவரன் தங்கம்...............................35,576

1 கிராம் வெள்ளி.............................73.50

1 கிலோ வெள்ளி.............................73,500

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.