ராணிப்பேட்டையில் கஜ வீர ஆஞ்சனேயர் சிலைக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா.
ராணிப்பேட்டை கஜ உயர ஆஞ்சனேயர் சிலைக்கு மகா அஷ்ட பந்தன கும்பாபிஷேக விழா இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது.


ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை அம்பூர் சாலையில் எழுந்தருளியுள்ள அருள்மிகு அன்னை அபிராமி ஆலய வளாகத்தில் அருள்மிகு வீர ஆஞ்சனேயருக்கு தனி சன்னதி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கஜ வீர ஆஞ்சனேயர் சிலைக்கு மகா அஷ்ட பந்தன கும்பாபிஷேக விழா இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு காலை 7.30 மணி அளவில் கலச பூஜைகள் நடைபெற்று கலச புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க கஜ வீர ஆஞ்சனேயர் சிலைக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதையடுத்து மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் ராணிப்பேட்டை எம்எல்ஏ ஆர்.காந்தி மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...