பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வுகள் ஒத்திவைப்பு

புதுச்சேரியில் தமிழக அரசின் பாடத்திட்டத்தை பின்பற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.  

News image
கோப்புப் படம்.
Updated On :23 ஏப்ரல் 2021, 2:36 pm

DIN

புதுச்சேரியில் தமிழக அரசின் பாடத்திட்டத்தை பின்பற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. 
தமிழக பள்ளிக் கல்வியில் பிளஸ் 2 பொதுத் தோ்வு மே 5 முதல் 31-ஆம் தேதி வரை நடத்தப்பட இருந்தது. கரோனா பரவல் அதிகரிப்பால் பொதுத்தோ்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. 
இந்த நிலையில் புதுச்சேரியில் தமிழக அரசின் பாடத்திட்டத்தை பின்பற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. பொதுத்தேர்வு நடைபெறும் தேதிகள் 15 நாள்களுக்கு முன் மாணவர்களுக்கு அறிவிக்கப்படும் என புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 
புதுவையில் புதிய உச்சமாக வியாழக்கிழமை ஒரே நாளில் 987 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த மேலும் 5 போ் உயிரிழந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.