தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

தமிழகத்தில் மேலும் சில கட்டுப்பாடுகள்: இன்று மாலை அறிவிப்பு?

தமிழகத்தில் கரோனாவை தடுக்க மேலும் சில கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.  

News image
Updated On :24 ஏப்ரல் 2021, 6:51 am

DIN

தமிழகத்தில் கரோனாவை தடுக்க மேலும் சில கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.  

முதல்வர் பழனிசாமி இன்று பிற்பகலில் தலைமைச் செயலாளர், உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ள நிலையில் புதிய கட்டுப்பாடுகள் தொடர்பாக தமிழக அரசு இன்று மாலை அறிவிப்பு வெளியிடும் என்று கூறப்படுகிறது. 

முதல்வருடனான ஆலோசனைக்குப் பிறகு தமிழகத்தில் அறிவிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படுமா என்பது குறித்தும், வார இறுதி நாள்களில் முழு பொது முடக்கமானது சனிக்கிழமை முதல் ஞாயிறு வரையில் நடைமுறைப்படுத்தப்படும் வகையில்  அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் கருதப்படுகிறது.

கரோனா பரவலைத் தடுக்க, முழு ஊரடங்காக இல்லாமல்  பணி நேரம், குறைப்பு, பணியாளர்கள் எண்ணிக்கை ஆகியவற்றிற்கு கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படலாம். மேலும், மத வழிபாட்டுத் தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவது, திரையரங்குகளில் மேலும் சில கட்டுப்பாடுகளை கொண்டு வருவது, பெரிய வணிக வளாகங்களுக்கும் கூடுதல் கட்டுப்பாடுகளை ஏற்படுத்துவது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

கூட்டம் அதிகமாகக் கூடும் வாரச்சந்தைகள் உள்ளிட்டவற்றிற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம். வீட்டிலிருந்தே பணியாற்றுபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அறிவுறுத்தப்படலாம் எனவும் கூறப்படுகிறது. 

ஏற்கெனவே, ஞாயிற்றுக்கிழமை முழு பொதுமுடக்கம் மற்றும் இரவு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மேலும் சில கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்புள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.