மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

சங்ககிரி: பேரூராட்சி பணியாளர்களுக்கு இலவச ஹோமியோபதி மாத்திரைகள் 

சங்ககிரி பப்ளிக் சேரிடபுள் டிரஸ்ட் சார்பில் ஹோமியோபதி மாத்திரைகள் இலவசமாக வழங்கும் நிகழ்ச்சி பேரூராட்சி அலுவலக வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. 

News image
இலவசமாக ஹோமியோபதி மாத்திரைகளை சுகாதார ஆய்வாளர் லோகநாதனிடம் வழங்கும் நிர்வாகிகள்.
Updated On :27 ஜனவரி 2024, 8:05 pm

DIN

சேலம் மாவட்டம், சங்ககிரி பப்ளிக் சேரிடபுள் டிரஸ்ட் சார்பில் சங்ககிரி பேரூராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி தன்மையுடைய ஹோமியோபதி மாத்திரைகள் இலவசமாக வழங்கும் நிகழ்ச்சி பேரூராட்சி அலுவலக வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. 

சங்ககிரி பப்ளிக் சேரிடபுள் டிரஸ்ட் சார்பில் கரோனா தொற்று பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கையாக பேரூராட்சியில் பணிபுரியும் அலுவலர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி தன்மையுடைய ஆர்சனிக்கம் ஆல்பம் 30சி ஹோமியோபதி மாத்திரைகளை பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் லோகநாதனிடம்  டிரஸ்ட் தலைவர் ஏ.ஆனந்தகுமார் தலைமையில் நிர்வாகிகள் வழங்கினர். 

டிரஸ்ட் துணைத்தலைவர் எம்.பாலகிருஷ்ணன், செயலர் ஆர்.ராகவன், பொருளாளர் கணேஷ், நிர்வாகி முருகேசன், பேரூராட்சி சுகாதார மேற்பார்வையாளர்கள் சுரேஷ், வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.