ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

ஊரடங்கு: தூத்துக்குடி நகர் வெறிச்சோடியது!

முழு ஊரடங்கு காரணமாக தூத்துக்குடி நகர் வெறிச்சோடி காணப்படுகிறது தடுப்பு வேலி அமைத்து காவல்துறையினர் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

News image
தூத்துக்குடியில் வெறிச்சோடிய சாலைகள்
Updated On :25 ஏப்ரல் 2021, 4:54 am

DIN

முழு ஊரடங்கு காரணமாக தூத்துக்குடி நகர் வெறிச்சோடி காணப்படுகிறது தடுப்பு வேலி அமைத்து காவல்துறையினர் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக வாரத்தின் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு பொதுமக்கள் நடமாட்டம் இன்றி நகர் முழுவதும் வெறிச்சோடி காணப்படுகிறது.

மேலும் மாவட்டம் முழுவதும் 2 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் 60 இடங்களில் தடுப்பு வேலி அமைக்கப்பட்டு வாகன தணிக்கை நடைபெறுகிறது.

ஊரடங்கு உத்தரவை மீறி தேவையில்லாமல் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் சாலைகளில் சுற்றித் திரிந்தால் அவர்கள் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.