தேனீக்கள் அமைப்பு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
தேனீக்கள் மாற்றுத்திறனாளிகள் அமைப்பு ஓராண்டு நிறைவையொட்டி அணைப்பட்டியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடை


தேனி: தேனீக்கள் மாற்றுத்திறனாளிகள் அமைப்பு ஓராண்டு நிறைவையொட்டி அணைப்பட்டியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
தேனீக்கள் மாற்றுத்திறனாளிகள் அமைப்பு ஓராண்டு நிறைவு பெற்று இரண்டாம் ஆண்டு விழா அணைப்பட்டியில் நடைபெற்றது.
விழாவுக்கு வின்னர் அலீம் தலைமை தாங்கினார், ஜெயம் மாற்றுத்திறனாளிகள் சங்கம் பூபதி பாண்டியராஜன், பழனிக்குமாா் முன்னிலையில் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளா் ஜக்கையப்பன் வரவேற்று பேசினார்.
விழாவில் 20 மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு அாிசி, மளிகைப் பொருள்கள், போதுமணி என்ற பெண்ணுக்கு துணி தேய்க்கும் பெட்டி, முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர் அரசு உதவி பெறாமல் வயதான தாயுடன் வசிப்பவருக்கு ரூ.4000 உதவித் தொகை வழங்கப்பட்டது.
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், அபிராமி, சந்துரு, ஆசிக், ராஜா, பிாியங்கா, சபீக்ராஜா, வாழ்த்தி பேசினார்கள்.
விழா ஏற்பாடுகளை தேனீக்கள் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் தலைவா் ஆசிாியா் பாண்டி, அழகேசன் துளசி வெங்கட், போட்டோ பாண்டி ஆகியோர் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...