ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கீழ்பவானி கால்வாயில் கசிவு நீரைத் தடுக்க கூடாது: 8 வாரங்களில் பரிசீலிக்க தமிழக அரசுக்கு உத்தரவு

கீழ்பவானி கால்வாயில் சீரமைப்பு பணி என்ற பெயரில் கால்வாயில் கசிவை தடுக்க கூடாது என்ற கோரிக்கையை 8 வாரங்களில் பரிசீலிக்க தமிழக அரசுக்கு  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image
சென்னை உயர்நீதிமன்றம்
Updated On :28 ஏப்ரல் 2021, 7:23 am

DIN

சென்னை: கீழ்பவானி கால்வாயில் சீரமைப்பு பணி என்ற பெயரில் கால்வாயில் கசிவை தடுக்க கூடாது என்ற கோரிக்கையை 8 வாரங்களில் பரிசீலிக்க தமிழக அரசுக்கு  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஈரோடு மாவட்டம், சென்னிமலையைச் சேர்ந்த பாபு தாக்கல் செய்த மனுவில், ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்கள் பயனடையும் கீழ் பவானி கால்வாயில் ஏற்படும் கசிவு நீர் மூலம், ஆயக்கட்டுதாரர்கள் அல்லாத விவசாயிகளும் பயனடைந்து வந்தனர். கீழ் பவானி கால்வாயை நபார்டு வங்கி நிதியுதவியுடன் சீரமைக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கால்வாய்  சீரமைப்பு என்ற பெயரில் கால்வாயின் உள்பகுதி சுவரில் கசிவு துளைகளை காங்கிரீட் கொண்டு அடைக்கப்படுகிறது. கால்வாயின் உள்புற சுவரை காங்கிரீட் கொண்டு மூடுவதால் கசிவு நீர் வெளியேறுவது தடுக்கப்பட்டு, அருகில் உள்ள நிலங்களில் நிலத்தடி நீர் உயர்வு தடுக்கப்படுவதாக கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி,  நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் இதுகுறித்து  தமிழக அரசுக்கு மனு அளிக்க மனுதாரருக்கு உத்தரவிட்டனர்.அந்த மனுவை 8 வாரங்களில் பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டுமென தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.