தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

வழிபாட்டுத் தலங்கள், கடைகள் மூடல்: முதல்வரின் அறிவிப்புக்கு ஓபிஎஸ் வரவேற்பு

கரோனாவைக் கட்டுப்படுத்த சில கடைகள் செயல்படவும், சில வழிபாட்டுத் தலங்களில் தரிசனத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :1 ஆகஸ்ட் 2021, 7:32 am

DIN


கரோனாவைக் கட்டுப்படுத்த சில கடைகள் செயல்படவும், சில வழிபாட்டுத் தலங்களில் தரிசனத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

"தமிழகத்தில் கடந்த 3 நாள்களாக கரோனா பாதிப்பு அதிகரித்து வருவது, மூன்றாவது அலை தவிர்க்க முடியாததாகி விடுமோ என்ற நிலை எழுந்துள்ளது. கட்டுப்பாடுகள் சரியாக நடைமுறைப்படுத்தப்படாததுதான் சில மாவட்டங்களில் அதிகரிப்புக்கு காரணம். கேரளத்திலும் பாதிப்பு அதிகரித்து வருவதால் தமிழ்நாட்டிற்குள் வருபவர்களைத் தீவிரமாக கண்காணிப்பது மிகவும் அவசியம்.

கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதை உணர்ந்த முதல்வர் தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகளின்றி ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு, விதிமுறைகளை கண்டிப்புடன் நடைமுறைப்படுத்த மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் துறைக்கு அறிவுரை போன்ற அறிவிப்புகளை வெளியிட்டார். இதுதவிர கடைகள் செயல்படவும், சில வழிபாட்டுத் தலங்களில் தரிசனத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது உண்மையிலேயே வரவேற்கத்தக்கது.

இருப்பினும், கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதைக் கண்காணித்து நடைமுறைப்படுத்துவதில் கணக்கம் நிலவுவதாகத் தெரிகிறது.

எனவே, முதல்வர் இதில் தனிக் கவனம் செலுத்தி, கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்படுவதை நூறு விழுக்காடு உறுதி செய்து, தமிழ்நாட்டு மக்களை மூன்றாம் அலையிலிருந்து காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.