அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

பாபநாசத்தில் பக்தர்களுக்குத் தடை

பாபநாசம் மற்றும் சொரிமுத்து அய்யனார் கோவில்களில் ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதையடுத்து பக்தர்கள் அனுமதிக்கப்படாததால் ஏமாற்றமடைந்தனர். 

News image
பக்தர்கள் அனுமதிக்கப்படாததால் வெறிச்சோடியுள்ள பாபநாசம் கோவில்
Updated On :28 ஜனவரி 2024, 3:48 am

DIN

அம்பாசமுத்திரம்: பாபநாசம் மற்றும் சொரிமுத்து அய்யனார் கோவில்களில் ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதையடுத்து பக்தர்கள் அனுமதிக்கப்படாததால் ஏமாற்றமடைந்தனர். 

ஆடி மாதத்தில் பல்வேறு புனிதத் தலங்களுக்கும், கோயில்களுக்கும் சென்று பக்தர்கள் புனித நீராடி வழிபடுவர். இந்நிலையில் கரோனா பாதிப்பு இருப்பதால் கோயில்களில் வழிபாடு செய்ய தடைவிதிக்கப்பட்டிருந்தது. தளர்வுகள் அறிவிக்கப்பட்டு கோவில்களில் வழிபட பக்தர்களுக்கு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் ஆடி மாதம் வரும் ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை, ஆடிப்பூரம் விழாக்களில் பக்தர் நதிகளில் நீராடவும், கோவில்களில் வழிபடவும் தமிழகத்தின் பல்வேறு பிரபல கோவில்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

வெறிச்சோடிய பாபநாசம் கோவில் படித்துறை

வெறிச்சோடிய பாபநாசம் கோவில் படித்துறை

திருநெல்வேலி மாவட்டத்திலும் ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை நாள்களில் பாபநாசம் மற்றும் சொரிமுத்து அய்யனார் கோவில்களுக்கு ஆக.1 முதல் ஆக.9 வரை பக்தர்கள் செல்லவும் தாமிரவருணி ஆற்றில் நீராடவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதையடுத்து பாபநாசம் செல்லும் சாலையில் டாணா பகுதியிலேயே பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். பக்தர்கள் யாரும் நடந்தும் கோவிலுக்குச் செல்லவோ, ஆற்றில் நீராடவோ அனுமதிக்கப்படவில்லை. இதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர்.

பாபநாசம், சொரிமுத்து அய்யனார் கோவில்களில் அன்றாட பூஜைகள் நடத்தப்பட்டன. போலீஸார், ஊர்க்காவல்படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பாபநாசம் வனப்பகுதிக்குள் செல்ல வனத்துறையினரும் அனுமதிக்கவில்லை.

தாமிரவருணி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யவும் புனித நீராடவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்ததையடுத்து தென்காசி மாவட்டம் ஆம்பூர், கடனாநதியில் பக்தர்கள் நீராடி தர்ப்பணம் செய்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.