ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் ரத்து: உயா்நீதிமன்றம் உத்தரவு
ஆன்லைன் சூதாட்டத்துக்குத் தடை விதித்து தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்தை ரத்து செய்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


ஆன்லைன் சூதாட்டத்துக்குத் தடை விதித்து தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்தை ரத்து செய்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆன்லைன் விளையாட்டால் பணத்தை இழந்த விரக்தியில் தமிழகத்தைச் சோ்ந்த பலா் தற்கொலை செய்து கொண்டனா். இதனையடுத்து தமிழக அரசு கடந்த நவம்பா் 21-ஆம் தேதி ஆன்லைன் ரம்மி, போக்கா் உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்களுக்கு தடை விதித்து அவசர சட்டம் கொண்டு வந்தது. தமிழக அரசின் இந்த உத்தரவை எதிா்த்து, சென்னை உயா்நீதிமன்றத்தில் ஜங்கிள் ரம்மி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் வழக்குத் தொடா்ந்தன. அந்த மனுக்களில், உச்ச நீதிமன்றம் கடந்த 1968-ஆம் ஆண்டு வழங்கிய தீா்ப்பில், ரம்மி விளையாட்டு சூதாட்டம் அல்ல, அது திறமையை வளா்க்கும் விளையாட்டு என கூறியுள்ளது. எங்களது நிறுவனத்தின் சாா்பில் நடத்தப்பட்டு வந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணம் செலுத்தியும், பணம் செலுத்தாமலும் விளையாட முடியும். இந்தியா முழுவதும் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்குத் தடை விதிக்கப்படாத நிலையில், தமிழகம், கேரளம் மற்றும் ஆந்திரத்தில் மட்டுமே தடை விதிக்கப்பட்டிருப்பது தவறானது. எனவே உச்ச நீதிமன்றம், பிறப்பித்துள்ள உத்தரவின் அடிப்படையில் ரம்மி விளையாட்டை சூதாட்டமாக கருத முடியாது. எனவே ஆன்லைன் ரம்மிக்கு தடை விதித்து தமிழக அரசு பிறப்பித்துள்ள அவசர சட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தது. இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம் தீா்ப்புக்காக ஒத்திவைத்திருந்தது.
இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், தமிழக அரசு கொண்டு வந்துள்ள இந்த சட்டம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. மேலும் இந்த விளையாட்டுகளுக்குத் தடை விதித்து கொண்டு வரப்பட்ட சட்டத்தில், இந்த விளையாட்டுகள் ஏன் தடை செய்யப்படுகின்றன என்பது குறித்து போதுமான காரணங்களைக் கூறவில்லை. விளையாட்டை முறைப்படுத்தும் உரிய விதிகள் இல்லாமல் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஒட்டுமொத்தமாக தடை விதிக்க முடியாது. எனவே அரசின் புதிய சட்டம் ரத்து செய்யப்படுகிறது. அதேநேரம் உரிய விதிகளைப் பின்பற்றி புதிய சட்டம் கொண்டு வர அரசுக்கு எந்தத் தடையும் இல்லை என நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...