லோயர்கேம்ப்பில் மின் உற்பத்தி 81 மெகாவாட்டாக உயர்வு
தேனி மாவட்டம் லோயர்கேம்ப்பில் உள்ள பெரியாறு மின்சார நிலையத்தில், 81 மெகாவாட்டாக மின் உற்பத்தி அதிகரித்தது.


கம்பம்: தேனி மாவட்டம் லோயர்கேம்ப்பில் உள்ள பெரியாறு மின்சார நிலையத்தில், 81 மெகாவாட்டாக மின் உற்பத்தி அதிகரித்தது.
தேனி மாவட்டம் லோயர்கேம்ப்பில் ஆக. 1ல் முல்லைபெரியாற்றில் 4 பேர் இழுத்துச்செல்லப்பட்டதால், மாவட்ட நிர்வாகம் பெரியாறு அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு திறந்து விடும் தண்ணீரை நிறுத்த உத்தரவிட்டது. அதன் பேரில் தண்ணீர் நிறுத்தப்பட்டது. ஆற்றில் இழுத்துச்செல்லப்பட்ட 4 பேரில் 12 வயது சிறுமியை தவிர மற்ற மூவரும் சடலமாக மீட்கப்பட்டனர்.
ஆற்றில் தண்ணீர் நிறுத்தப்பட்டதால் லோயர்கேம்ப் மின்சார நிலையத்தில், ஜூலை, 31 வரை, 168 மெகாவாட்டாக இருந்த மின்சார உற்பத்தி, ஆக. 1 ல், 21 மெகாவாட்டாக குறைந்தது, பின்னர் திங்கள்கிழமை முதல் விநாடிக்கு பெரியாறு அணையிலிருந்து 900 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டதால், முதல் இரண்டு மின்னாக்கிகளில், 40, 41 மெகாவாட் மின்சார உற்பத்தி அதிகரித்தது.
அணை நிலவரம்
செவ்வாய்க்கிழமை நிலவரப்படி முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம், 136.30 அடியாகவும் (மொத்த உயரம் 142), அணைக்குள் நீர் இருப்பு, 6,194 மில்லியன் கன அடியாகவும், அணைக்குள் நீர்வரத்து விநாடிக்கு, 908 கன அடியாகவும், தமிழகப்பகுதிக்கு நீர் வெளியேற்றம் விநாடிக்கு, 900 கன அடியாகவும் இருந்தது.
மழை குறைந்தது
ஞாயிற்றுக்கிழமை பெரியாறு அணைப்பகுதியில் 4.0 மில்லி மீட்டர் மழையும், தேக்கடி ஏரியில் 2.0 மி.மீ., மழையும் பெய்த நிலையில், திங்கள் கிழமை பெரியாறு அணைப்பகுதியில் மழை பெய்யவில்லை, தேக்கடி ஏரியில் மட்டும் 1.2 மி.மீ., மழையும், செவ்வாய்க்கிழமை பெரியாறு அணைப்பகுதியில் மழை பெய்யாமல், தேக்கடி ஏரியில் மட்டும் 0.4 மில்லி மீட்டர் மழையும் பெய்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...