எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

தரங்கம்பாடியில் சுமைதூக்கும் தொழிலாளர் சங்கம் சார்பில் குடும்ப நல நிதி வழங்கல்

செம்பனார்கோவில் ஒன்றியம் காலகஸ்திநாதபுரம் ஊராட்சி உமையாள்புரம் நேரடி நெல் கொள்முதல் வளாகத்தில் சுமைதூக்கும் தொழிலாளர் குடும்பத்தினருக்கு குடும்ப நல நிதி வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
காலகஸ்திநாதபுரத்தில் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு குடும்ப நல நிதியாக ரூ. 10 ஆயிரம் காசோலை வழங்கப்பட்டபோது
Updated On :6 ஆகஸ்ட் 2021, 10:00 am

DIN

தரங்கம்பாடி: மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியம் காலகஸ்திநாதபுரம் ஊராட்சி உமையாள்புரம் நேரடி நெல் கொள்முதல் வளாகத்தில் சுமைதூக்கும் தொழிலாளர் குடும்பத்தினருக்கு குடும்ப நல நிதி வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் செம்பனார்கோயில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் நல சங்க செயலாளர் கே .ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் ராஜமோகன் முன்னிலை வகித்தார். மாநில நிர்வாக குழு உறுப்பினர் எம். ராஜேந்திரன் வரவேற்றுப் பேசினார்.

நிகழ்ச்சியில் மயிலாடுதுறை மாவட்டத்தை சார்ந்த சுமைதூக்கும் தொழிலாளர்கள் குடும்பத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ. 10 ஆயிரம் வீதம் ஏழு நபர்களுக்கு குடும்ப நல நிதியாக  டிஎன்சிஎஸ்சி, ஏஐடியுசி சுமைதூக்கும் தொழிலாளர் சங்கம் சார்பில் காசோலைகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சங்க பொறுப்பாளர்கள் வீரசுந்தரம், ஞானசேகரன், கணேசமூர்த்தி மற்றும் சங்கத்தைச் சார்ந்த நிர்வாகிகள் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.