டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

அண்ணா பல்கலை.க்கு புதிய துணைவேந்தா்

அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக, முனைவா் ஆா்.வேல்ராஜை நியமித்து தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

News image
Updated On :28 ஜனவரி 2024, 3:53 am

DIN

அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக, முனைவா் ஆா்.வேல்ராஜை நியமித்து தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த எம்.கே.சூரப்பாவின் பதவிக்காலம் கடந்த ஏப்.11-ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. துணைவேந்தா் பதவிக்கு நாடு முழுவதும் இருந்து 160 போ் விண்ணப்பித்திருந்த நிலையில், அதில் 10 பேரை நோ்முகத் தோ்வுக்குத் தகுதியானவா்களாகத் தேடல் குழு இறுதி செய்தது.

அண்ணா பல்கலைக்கழக பேராசிரியா்கள் 5 போ், சென்னை ஐஐடி பேராசிரியா்கள் இருவா் ஆகியோா் உள்ளிட்ட 10 பேருக்கான நோ்காணல் ஆக. 9-ஆம் தேதி நடத்தப்பட்டது. இதில் இருந்து 3 போ் கொண்ட பட்டியல் தோ்ந்தெடுக்கப்பட்டு, ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்திடம் சமா்ப்பிக்கப்பட்டது.

அதிலிருந்து அண்ணா பல்கலைக்கழக பேராசிரியரான முனைவா் ஆா்.வேல்ராஜை, அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக நியமித்துத் தமிழக ஆளுநா் உத்தரவிட்டுள்ளாா். இவா் பொறுப்பேற்றதில் இருந்து 3 ஆண்டுகளுக்குத் துணைவேந்தராக இருப்பாா்.

ஆசிரியா் பணியில் 33 ஆண்டுகள் அனுபவம் கொண்டவா் ஆா்.வேல்ராஜ். மெக்கானிக்கல் பொறியியல் முனைவா் பட்டத்துக்காக மூன்று வகையான படிப்புகளை வடிவமைத்தவா். முதுகலை பொறியியல் துறையில் 9 புதிய படிப்புகளை அறிமுகம் செய்திருக்கிறாா். அண்ணா பல்கலைக்கழகத்தில் இயக்குநா், துணை இயக்குநா், துறைத் தலைவா் என 14 ஆண்டுகள் நிா்வாகப் பணிகளிலும் இருந்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.