கம்பம்: முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு விநாடிக்கு 1,800 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் லோயர்கேம்ப்பில் மின்சார உற்பத்தி அதிகரித்துள்ளது.
முல்லைப்பெரியாறு அணையில் வியாழக்கிழமை நிலவரப்படி நீர்மட்டம் 136 அடி உயரமாகவும், நீர் இருப்பு 6,118 மில்லியன் கன அடியாகவும், அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 641 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் விநாடிக்கு 1,800 கன அடியாகவும் இருந்தது.
தமிழகப்பகுதிக்கு நீர் 1,800 கன அடி வெளியேற்றப்பட்டதால், லோயர்கேம்ப்பில் உள்ள பெரியாறு மின்சார உற்பத்தி நிலையத்தில் நான்கு மின்னாக்கிகளும் இயக்கப்பட்டு தலா 42,40, 42,42 மெகாவாட் என மொத்தம் 166 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. கடந்த ஆக.5 முதல் இரண்டு மின்னாக்கிகளில் தலா 41, 40 மெகாவாட் என மொத்தம் 81 மெகாவாட்டாக இருந்த மின்சார உற்பத்தி வியாழக்கிழமை முதல் 162 மெகாவாட்டாக அதிகமாகியது குறிப்பிடத்தக்கது.
அணை நீர்மட்டம் 136 அடி உயரமாக இருப்பதாலும், பருவமழை தொடர வாய்ப்புள்ளதாலும், பெரியாறு அணையிலிருந்து, தமிழக பகுதிக்கு 1,800 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதாக, அணைப்பகுதி பொறியாளர் ஒருவர் தெரிவித்தார். பெரியாறு அணைப்பகுதியில் 5.2 மில்லி மீட்டர் மழையும், தேக்கடி ஏரியில், 3.8 மி.மீ., மழையும் பெய்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மகர ராசிக்கு இன்று எப்படி? தினப்பலன்கள்!

10-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ கணித மதிப்பெண் சரிவு: மறு தேர்வுக்கு விண்ணப்பிக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்கள்!

தமிழக டிஜிபி நியமன உத்தரவில் திருத்தம் கோரி தலைமைத் தேர்தல் ஆணையத்தில் திமுக மனு

தொகுதி அலசல்...அவிநாசி (தனி) மத்திய அமைச்சரை எதிர்கொள்ளும் இளம் பெண் மருத்துவர்!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

