ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

பேராவூரணி அருகே திருமணமாகி 3 மாதத்தில் கட்டையால் அடித்து மனைவி கொலை

பேராவூரணி அருகே திருமணமாகி 3 மாதத்தில் கட்டையால் அடித்து மனைவி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

News image
Updated On :14 ஆகஸ்ட் 2021, 9:36 am

DIN

பேராவூரணி அருகே திருமணமாகி 3 மாதத்தில் கட்டையால் அடித்து மனைவி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள கொண்டிகுளத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன்(35). இவருக்கும் பேராவூரணி ஒன்றியம் வாட்டாத்திக்கொல்லை காட்டைச் சேர்ந்த ஜோதி(19) என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் பேராவூரணி அருகே உள்ள ஊமத்தநாட்டில் உள்ள குலதெய்வ கோவில் கிடாவெட்டு பூஜைக்காக வெள்ளிக்கிழமை இரவு வந்த தம்பதியினர் உறவினர் பாலகிருஷ்ணன் வீட்டில் தங்கியிருந்துள்ளனர்.

சனிக்கிழமை காலை இருவரும் அருகில் உள்ள கோவிலுக்குச் சென்றுவருவதாக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். ஊமத்தநாடு குளக்கரை அருகே சென்றபோது இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்ப்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மணிகண்டன் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சாலையோரம் கிடந்த கட்டையால் ஜோதியின் தலையில் அடித்ததில் தலைசிதறி சம்பவ இடத்திலேயே ஜோதி உயிரிழந்தார். இதுகுறித்து பேராவூரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலைசெய்துவிட்டு தலைமறைவான மணிகண்டனை தேடிவருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.