கடையநல்லூர்: தென்காசி மாவட்டம் நயினாரகரத்தில் உள்ள தியாகி லட்சுமிகாந்தன் பாரதியின் இல்லத்திற்கு திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் சென்று மரியாதை செலுத்தினார்.
தென்காசியில் நடந்த சுதந்திர நாள் விழாவில், சுதந்திர போராட்ட தியாகியும், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான லட்சுமிகாந்தன் பாரதி(95) கலந்து கொண்டார். ஆனால், அங்கு அவருக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை. இந்நிலையில் இது தொடர்பான செய்தி கட்டுரை தினமணியில் திங்கள்கிழமை வெளியானது.
இதைத்தொடர்ந்து நயினாரகரத்தில் தியாகி லட்சுமிகாந்தன் பாரதியின் வீட்டிற்கு சென்ற தென்காசி மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தர்ராஜ் அவருக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் நயினாரகரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள சுதந்திர போராட்ட தியாகிகளின் (லட்சுமிகாந்தன் பாரதியின் முன்னோர்கள்) திருவுருவப் படங்களுக்கு ஆட்சியர் மரியாதை செலுத்தினார்.

நயினாரகரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள தியாகிகளின் படங்களுக்கு முன் ஆட்சியர்.
இதுகுறித்து லட்சுமிகாந்தன் பாரதி கூறியது; தென்காசியில் நடைபெற்ற சுதந்திரநாள் விழாவில் கலந்து கொண்டேன். என்னை மாவட்ட வருவாய் அலுவலர் வரவேற்றார். சுதந்திர நாள் விழாவில் கொடியேற்றும் நிகழ்ச்சியை கண்டு பரவசமடைந்தேன் .வேறு எந்த வருத்தமும் எனக்கு இல்லை. இருப்பினும் மாவட்ட ஆட்சியர் என் வீட்டிற்கு வந்து என்னை கௌரவித்துள்ளார். மேலும் எனது குடும்பத்தைச் சேர்ந்த தியாகிகளுக்கும் அவர் மரியாதை செலுத்தி சென்றுள்ளார். தியாகிகளின் மீது அரசு கொண்டுள்ள அக்கறையை இது காட்டுகிறது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கார்த்திகை தீபம் தொடரில் பாண்டவர் இல்லம் நடிகை!

வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

ஹலோகிராமில் விஜய் உருவம்... தவெக வேட்பாளர் நூதன பிரசாரம்!

100% வாக்குப் பதிவு: கோவையில் இந்திய துணை தேர்தல் ஆணையர் ஆய்வுக் கூட்டம்
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


