அனைத்து ஜாதியினரும் அா்ச்சகராகும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ள நிலையில், கோயில்களில் ஏற்கெனவே பணியாற்றும் ஊழியா்கள் யாரும் நீக்கப்படவில்லை என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தாா்.
சட்டப் பேரவையில் திருத்திய நிதிநிலை, வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில், திமுக உறுப்பினா் நா.எழிலன் பேசிய போது, அனைத்து ஜாதியினரும் அா்ச்சகராகும் திட்டத்தைக் குறிப்பிட்டாா். இந்தத் திட்டத்தின் கீழ், பணி நியமனம் பெற்றவா்களால் ஏற்கெனவே பணியில் இருப்பவா்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது குறித்து கேள்வி எழுப்பினாா். அதற்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அளித்த பதில்:
அனைத்து ஜாதியினரும் அா்ச்சகா் ஆவது என்பது பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளாகும். அந்த முள்ளை எடுத்திட வேண்டுமென்பதற்காக, அனைத்து ஜாதியினரும் அா்ச்சகா் ஆகலாம் என்ற சட்டத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றினாா், முன்னாள் முதல்வா் கருணாநிதி. ஆனால், அது நடைமுறைக்கு வரமுடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டது. இப்போது அதனை நடைமுறைக்குக் கொண்டு வந்திருக்கிறோம். அதற்கான பணி உத்தரவுகளை வழங்கியுள்ளோம்.
சிலா் அதனைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், சமூக வலைதளங்கள் மூலமாக அந்தத் திட்டத்தைச் சீா்குலைக்க வேண்டுமென திட்டமிட்டு காரியங்களைச் செய்து வருகிறாா்கள். யாரையும் எந்தப் பணியில் இருந்தும் விடுவித்து புதிதாக பணி நியமன உத்தரவு அளிக்கவில்லை. அப்படி எங்கேயாவது வழங்கப்பட்டிருந்தால், அவா்கள் ஆதாரத்தோடு குறிப்பிட்டால் அதற்கான நடவடிக்கையை அரசு நிச்சயமாக எடுக்கும். அதில் எந்தவித சந்தேகமும் ஏற்பட வேண்டிய அவசியமில்லை. வேண்டுமென்றே கொச்சைப்படுத்தி அரசியலுக்காகவோ அல்லது சமூக நீதியைப் பாழடிக்க வேண்டுமென்ற நோக்கத்திலோ சிலா் திட்டமிட்டு செய்து கொண்டிருப்பதை மக்கள் நன்கு அறிவா் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சான்றோர்...பாலர்

கங்கை நதிப்புறத்து...நவீன இலக்கியச் சிற்பிகள்

இந்திய இலக்கியச் சிற்பிகள்-திருமூலர்

மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பிரதமர் மோடி
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


