திருப்பூர்: வெள்ளக்கோவில் அருகே நூற்பாலையில் தீ விபத்து
திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே செவ்வாய்க்கிழமை ஒரு நூற்பாலையில் தீ விபத்து நேரிட்டது.


வெள்ளக்கோவில்: திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே செவ்வாய்க்கிழமை ஒரு நூற்பாலையில் தீ விபத்து நேரிட்டது.
இங்குள்ள திருமங்கலத்தில் முருகேஷ் (40) என்பவருக்குச் சொந்தமான ஓபன் என்ட் நூற்பாலை செயல்பட்டு வருகிறது. இந்த நூற்பாலை பகல் நேரத்தில் வழக்கம் போல இயங்கிக் கொண்டிருந்த போது, ஒரு இயந்திரத்திலிருந்து புகை வந்தது.
அதைப் பார்த்த தொழிலாளர்கள் இயந்திரத்தை நிறுத்திய நிலையில், திடீரென தீப்பிடித்து நாலாபுறமும் பரவியது. தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலர் சி.தனசேகரன், நிலைய போக்குவரத்து அலுவலர் வேலுச்சாமி மற்றும் தீயணைப்பு வீரர்கள் மூன்று மணி நேரம் போராடி தீயணைப்பு வாகனத்தில் இருந்து தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். மின்சாரக் கோளாறு காரணமாக தீப்பிடித்துள்ளது. இதில் பஞ்சு பேரல்கள், கட்டடத்தின் சிமெண்ட் மேற்கூரையின் சில பகுதிகள் எரிந்து நாசமாயின.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...