திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கரோனா பாதிப்பில் மீண்டும் சென்னையை முந்தியது கோவை

கோவையில் புதிதாக 210 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 198 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது.

News image
கரோனா பாதிப்பில் சென்னையை முந்திய கோவை
Updated On :18 ஆகஸ்ட் 2021, 2:28 pm

DIN


கோவையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 210 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
சென்னையில் நேற்று அதிக அளவில் கரோனா பதிவான நிலையில் இன்று சென்னையை கோவை மாவட்டம் முந்தியுள்ளது.

சென்னையில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 198 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை மொத்தமாக 5,41,809 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரோனா சிகிச்சையிலிருந்து புதிதாக 206 பேர் குணமடைந்த நிலையில், 2 பேர் உயிரிழந்தனர். இன்று மட்டும் 24,159 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.  

சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு 2,061 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

சென்னை கோவைக்கு அடுத்தபடியாக ஈரோட்டில் 156 பேரும், தஞ்சாவூரில் 109 பேரும், செங்கல்பட்டில் 108 பேரும், சேலத்தில் 103 பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.