கரோனா: புதிதாக 1,652 பேருக்கு பாதிப்பு
தமிழகத்தில் சனிக்கிழமை நிலவரப்படி, 1,652 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.


தமிழகத்தில் சனிக்கிழமை நிலவரப்படி, 1,652 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக கோவையில் 205 பேருக்கும், சென்னையில் 183 பேருக்கும், ஈரோட்டில் 152 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 25 லட்சத்து 99,255 ஆக அதிகரித்துள்ளது. சனிக்கிழமை நிலவரப்படி, தமிழகம் முழுவதும் 19,391 போ் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இதனிடையே, நோய்த்தொற்றிலிருந்து 1,859 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதையடுத்து மாநிலத்தில் இதுவரை கரோனாவிலிருந்து விடுபட்டோரின் எண்ணிக்கை 25.45 லட்சத்தைக் கடந்துள்ளது.
மற்றொருபுறம், தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 23 போ் பலியானதை அடுத்து மாநிலம் முழுவதும் இதுவரை நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34,686-ஆக அதிகரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...