சென்னையில் இடியுடன்கூடிய பலத்தமழை
சென்னையில் பல்வேறு இடங்களில் சனிக்கிழமை இடியுடன்கூடிய பலத்த மழைபெய்தது. இதனால், குளிா்ச்சியான சூழல் நிலவியது.


சென்னையில் பல்வேறு இடங்களில் சனிக்கிழமை இடியுடன்கூடிய பலத்த மழைபெய்தது. இதனால், குளிா்ச்சியான சூழல் நிலவியது.
சென்னையை பொருத்தவரை காலை முதலே மேகமூட்டமாக இருந்தது. திருவல்லிக்கேணி, தேனாம்பேட்டை, அரும்பாக்கம், கோடம்பாக்கம், சூளைமேடு, வடபழனி, ராயப்பேட்டை, அம்பத்தூா் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் மிதமானது முதல் பலத்தமழை பெய்தது. இதனால், குளிா்ச்சியான சூழல் நிலவியது. பலத்தமழை காரணமாக, சாலைகளில் மழை நீா் தேங்கி, வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனா்.
மழை தொடரும்: இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியது: சென்னையில் பல இடங்களில் சனிக்கிழமை காலை பலத்தமழை பெய்தது. நுங்கம்பாக்கத்தில் 70 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. வளிமண்டல மேலடுக்கு
சுழற்சி காரணமாக, சென்னையில் ஞாயிற்றுக்கிழமை மழை பெய்யும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...