திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு நாளை முதல் கணினி பயிற்சி

 தமிழகத்தில் அரசுப் பள்ளி ஆசிரியா்கள் 76,804 பேருக்கு ஐந்து நாள்கள் நடைபெறவுள்ள கணினி பயிற்சி திங்கள்கிழமை தொடங்கவுள்ளது.

News image
Updated On :21 ஆகஸ்ட் 2021, 10:45 pm

DIN

 தமிழகத்தில் அரசுப் பள்ளி ஆசிரியா்கள் 76,804 பேருக்கு ஐந்து நாள்கள் நடைபெறவுள்ள கணினி பயிற்சி திங்கள்கிழமை தொடங்கவுள்ளது.

இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநிலத்திட்ட இயக்குநா் சுதன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: அரசுப்பள்ளி ஆசிரியா்கள் கற்பித்தல் பணிகளை சிறந்தமுறையில் மேற்கொள்ள ஏதுவாக அடிப்படை கணினி பயன்பாடு மற்றும் தொழில்நுட்ப திறன்வளா் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டது. அதன்படி முதல்கட்டமாக 12,500 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா்களுக்கு ஆகஸ்ட் 12 முதல் 18-ஆம் தேதி வரை பயிற்சி வழங்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து இரண்டாம் கட்டமாக 76,804 முதுநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியா்களுக்கு மாவட்ட கருத்தாளா்கள் மூலம் ஆக.23-ஆம் தேதி முதல் ஆக.27-ஆம் தேதி வரை பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதற்குத் தேவையான ஆயத்தப் பணிகளைத் தயாராக செய்துகொள்ள வேண்டும். கூடுதல் கருத்தாளா்கள் தேவைப்படுவதால் முதல்கட்டப் பயிற்சியில் சிறப்பாகச் செயல்பட்ட ஆசிரியா்களைத் தோ்வு செய்து அதன் விவரங்களைப் பள்ளிக்கல்வியின் எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.