திமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்சிஎஸ்கேவின் முதல் வெற்றிக்கு 251 ரன்கள் இலக்குதமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

விருதுநகரில் பெண் போலீஸ் கொலை: கணவர் கைது

விருதுநகரில் குடும்பத்தகராறு காரணமாக பெண் காவலர் கழுத்தை பெல்டால் இறுக்கி கொலை செய்த கணவரை வெள்ளிக்கிழமை நள்ளிரவு போலீசார் கைது செய்தனர்.

News image

கொலை செய்யப்பட்ட பெண் காவலர் பானுப்பிரியா

Updated On :21 ஆகஸ்ட் 2021, 3:22 am


விருதுநகர்: விருதுநகரில் குடும்பத்தகராறு காரணமாக பெண் காவலர் கழுத்தை பெல்டால் இறுக்கி கொலை செய்த கணவரை வெள்ளிக்கிழமை நள்ளிரவு போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்தவர் பானுப்பிரியா (30). இவரது கணவர் விக்னேஷ் (35) மதுரை அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துநராக பணிபுரிந்து வருகிறார். 

விருதுநகர் அருகே குளக்கரையில் வசித்து வரும் இவர்களுக்கு நான்கு வயதில் ஒரு ஆண் குழந்தை இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளனர். 

இந்நிலையில், விக்னேஷ் தனது மனைவியை மதுரையில் உள்ள தனது தாய் வீட்டில் தங்குவதற்கு அழைத்துள்ளார். அதற்கு பானுப்பிரியா மறுத்ததாக கூறப்படுகிறது. 

இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்னை இருந்து வந்ததாம். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு பானுப்பிரியாவை பெல்டால் கழுத்தை நெரித்து விக்னேஷ் கொலை செய்துள்ளார். 

இதுகுறித்து தகவலறிந்த சூலக்கரை போலீசார் பெண் போலீஸ் உடலை கைப்பற்றி விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

இதுதொடர்பாக அவரது கணவர் விக்னேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.