வங்கக் கடலில் நிலநடுக்கம்: சென்னையில் நில அதிர்வு
சென்னைக்கு கிழக்கே வங்கக் கடலில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், அதன் தாக்கத்தால் சென்னையின் சில இடங்களில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.


சென்னைக்கு கிழக்கே வங்கக் கடலில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், அதன் தாக்கத்தால் சென்னையின் சில இடங்களில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.
வங்கக் கடல் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆகப் பதிவாகியிருந்ததாக தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம் அறிவித்துள்ளது.

ஆந்திர மாநிலம் காக்கிநாடாவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. காக்கிநாடாவிலிருந்து 296 கி.மீ. கிழக்கு திசையில், சென்னைக்கு சுமார் 322 கி.மீ. தொலைவில் வங்கக் கடலில் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கத்தின் மையம் அமைந்திருந்ததாகக் கூறப்படுகிறது.

வங்கக் கடலின் சில பகுதிகளில் சரியாக பகல் 12.25 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. வங்கக் கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கத்தால் சென்னையில் அடையாறு, பெசன்ட்நகர், திருவான்மியூர் பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...