சென்னை வண்டலூர் உயிரியல் பூங்கா 4 மாதங்களுக்குப் பின்னர் இன்று திறக்கப்பட்டது.
தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டநிலையில் தற்போது கரோனா பரவல் குறைந்து வருவதால் படிப்படியாக தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், வண்டலூர் உயிரியல் பூங்கா 4 மாதங்களுக்குப் பின்னர் இன்று திறக்கப்பட்டது. கரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் இன்று காலை 9 மணி முதல் பொதுமக்கள் பூங்காவுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இது தொடர்பாக, பூங்கா இயக்குநர் கருணபிரியா கூறுகையில்,
பூங்காவிற்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு, சானிடைசர் வழங்கப்படுகிறது. முகக்கவசமும் வைக்கப்பட்டுள்ளது. தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வலியுறுத்தப்படுகிறது.
இவ்வாறாக பூங்காவில் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு பலகைகளும் வைக்கப்பட்டுள்ளன.
மேலும் பூங்காவில் ஆய்வு மேற்கொள்ள குழு அமைக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்களின் பெயர் மற்றும் செல்போன் எண் சேகரிக்கப்படுகிறது.
பூங்காவில் வாகனங்களில் செல்வது ரத்து செய்யப்பட்டுள்ளது. புலி, மான், சிங்கம் போன்ற விலங்குகள் இருக்கும் பகுதிகளில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியுள்ளனர் என்றார்.
இதையும் படிக்க | விஜயகாந்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சியை விரும்பும் மக்கள்: திருமாவளவன் கருத்து!

புதிய வரலாறு! திருவண்ணாமலை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் அதிமுக வெற்றி!
4 தொகுதிகளில் வெற்றி... தமிழக மக்களுக்கு நன்றி: அன்புமணி இராமதாஸ் அறிக்கை!

புதுவைப் பேரவைத் தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்த தலைவர்கள்!
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


